Connect with us

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அரசிற்கு முழு ஒத்துழைப்பு தருவோம்!: ஸ்டாலின்

NH 75 scaled

செய்திகள்

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அரசிற்கு முழு ஒத்துழைப்பு தருவோம்!: ஸ்டாலின்

தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அரசிற்கு முழு ஒத்துழைப்பு தருவோம்!: ஸ்டாலின்

சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் நெடுஞ்சாலை திட்டம் பற்றிய தகவல் வெளியானது. இந்தநிலையில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒத்துழைப்பு தருவதாக கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன்படி தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் பணிகளை விரைவுபடுத்த மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் இவ்வாறு கூறினார்.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட பணிகளில் உள்ள 80 சதவீத பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு உள்ளன என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சை, அரியலூர்-காரைக்குடி சாலை தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு உள்ளன என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு போன்ற தொழில்மயமான மாநிலத்திற்கு சாலை இணைப்பு முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து உள்ளோம் என்றும் கூறியுள்ளார். அரசு மற்றும் தனியார் நிலங்களில் மண் உள்ளிட்டவை எடுக்க சுரங்க விதிகளில் திருத்தம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top