முன்னொரு காலத்தில் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற பழமொழிக்கேற்ப உழவர்களே உயர்ந்தவர்களாக காணப்பட்டனர். காலங்கள் செல்ல செல்ல நவீனயுகத்தில் விவசாயிகளின் கூக்குரல் பலருக்கும் கேட்காமல் போய்விட்டது.
இதனால் நாள்தோறும் இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து காணப்பட்டது. பலருக்கும் உணவளிக்கும் விவசாயிகள் உணவின்றி தவிப்பதும் வேதனை அளிப்பதாக காணப்பட்டன.
இத்தகைய விவசாயிகளை போற்றும் வகையில் இன்றைய தினம் தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதன்படி உழவர்களின் நலனை அவர்கள் பயிர்களைக் காப்பது போல் எந்நாளும் காப்போம் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
உலகத்தவர்க்கு அச்சாணியாக காணப்படுகின்ற திருவள்ளுவர் குறிப்பிடும் உழவர்கள் தான் இன்று மக்களாட்சியின் வலிமையை உலகுக்கு எடுத்து வைத்துள்ளனர் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். பலரும் இன்று விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.