Connect with us

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடித்தவைகளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கடைபிடிப்போம்!: மாநில தேர்தல் ஆணையம் உறுதி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடித்தவைகளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கடைபிடிப்போம்!: மாநில தேர்தல் ஆணையம் உறுதி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடித்தவைகளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கடைபிடிப்போம்!: மாநில தேர்தல் ஆணையம் உறுதி

நம் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதன் பின்னர் ஊரக உள்ளாட்சி தேர்தலும் நடைபெற்றது. இருப்பினும் இன்றுவரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. இதற்காக மாநில தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது.

இவ்வாறு இருப்பினும் ஹைகோர்ட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க பலரும் மனு தாக்கல் செய்கின்றனர். இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

அதில் மாநில தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடைபிடித்த கொரோனா நடவடிக்கைகள் அனைத்தும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கடைபிடிக்கப்படும் என்றும் உறுதியளிக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி வழக்கு ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் இவ்வாறு கூறியுள்ளது. உச்சநீதிமன்றம் ஜனவரி 27ம் தேதிக்குள் கடைபிடித்த அறிவிப்பாணை வெளியிட அறிவித்துள்ளதே என்றும் சென்னை ஐகோர்ட் கேள்வி கேட்டது.

கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை உடன் தேர்தல் நடத்த டிசம்பரில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. தேர்தலை தள்ளி வைக்க கூறும் அனைத்து மனுக்களும் 24ம் தேதி விசாரணை செய்யப்படும் என்று ஹை கோர்ட் கூறியுள்ளது. இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வரும் திங்கட்கிழமைக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top