
Tamil Nadu
வேண்டும் வேண்டும் ஒற்றை தலைமை வேண்டும்!!!- தொண்டர்கள் முழக்கம்;
இன்றைய தினம் அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் உள்ளனர்.
இந்த பொதுக் கூட்டத்தின் முடிவில் அதிமுகவின் தலைமைப் பொறுப்பு யாருக்கு என்பது உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் வந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும் தொண்டர்கள் இடையே அமைதி காக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு செல்கின்றனர். அதன் வரிசையில் ஒற்றை தலைமை முழக்கம் கோரியிருந்த தொண்டர்களை அமைதியாக உட்காரும்படி ஆர் பி உதயகுமார் மேடையில் பேசினார்.
மேலும் தொண்டர்கள் அனைவரும் இரட்டை தலைமை வேண்டாம் வேண்டாம் என்று முழக்கமிட்டு வருகின்றனர். அதன்படி வேண்டும் வேண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என்று ஸ்ரீவாரு மண்டபம் முழுவதும் முழக்கம் எழுந்துள்ளது .மேலும் வேண்டாம் வேண்டாம் இரட்டை தலைமை வேணாம் என்று ஸ்ரீவாரு மண்டபம் முழுவதும் முழக்கம் எழுந்துள்ளது.
