Connect with us

யாரையும் குறை கூறி வாக்கு கேட்க வேண்டாம் அது நமக்கு நஷ்டம்! ஒரே பேச்சு ஒட்டுமொத்த மக்களிடமும் வரவேற்பு!!

rajendhra balaji

தமிழகம்

யாரையும் குறை கூறி வாக்கு கேட்க வேண்டாம் அது நமக்கு நஷ்டம்! ஒரே பேச்சு ஒட்டுமொத்த மக்களிடமும் வரவேற்பு!!

யாரையும் குறை கூறி வாக்கு கேட்க வேண்டாம் அது நமக்கு நஷ்டம்! ஒரே பேச்சு ஒட்டுமொத்த மக்களிடமும் வரவேற்பு!!

தமிழகமே மிகவும் கலகலப்பாக உள்ளது என்றே கூறலாம். ஏனென்றால் தமிழகத்தில் பல ஆண்டுகளாக மக்கள் காத்துக்கொண்டிருந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. அதன்படி வருகிற சனிக்கிழமை தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் வாக்கு சேகரிப்பில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி அதி தீவிரம் காட்டுகின்றனர். அதன் எதிரொலியாக தேர்தல் பரப்புரை நிகழ்ந்து கொண்டு வருகிறது. இந்த தேர்தல் பரப்புரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது அதிமுக மட்டுமின்றி அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அதன்படி கடந்த சில நாட்களாக பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக சிவகாசி மாநகராட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் யாரையும் குறை கூறி வாக்கு கேட்க வேண்டாம் அது நமக்கு நஷ்டம் தான் என்று எனது அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

அதிமுக ஆட்சியில் செய்த நலத் திட்டங்களையும் சாதனைகளையும் கூறி வாக்கு சேகரிப்பில் தவிர அந்த வேட்பாளர் அப்படி, இவர் அப்படி என்று மற்றவரை குறை கூறி வாக்கு சேகரிக்க வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top