மெக்கானிக்கிடம் போன் போட்ட போது சிக்கிய வேட்பாளர்! நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனுவை ஏற்க மறுப்பு!!

நேற்றுதான் தமிழகத்தில் நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால் அதிதீவிரமாக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் இன்று காலை முதலே தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது.

இதில் ஆங்காங்கே பலரின் வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். அந்த படி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மனுவை ஏற்க மறுத்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நாளை நகராட்சி 33 வது வார்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் ஏற்க மறுத்துள்ளனர்.

மெக்கானிக்  ஒருவரின் கையெழுத்தை போலியாக போட்டு முன்மொழிவு கடிதம் வழங்கியதால் வேட்பு மனுவை ஏற்க மறுப்பு தெரிவித்தனர். 33வது வார்டை சேர்ந்த மெக்கானிக் கார்த்திக் என்பவரின் கையெழுத்தை போட்டு ரவி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

வேட்பு மனுவை ஆய்வு செய்த அதிகாரிகள், மெக்கானிக் கார்த்திக்கை போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். தான் யாருக்கும் எந்த ஒரு கடிதமும் கொடுக்கவில்லை, வேட்பாளர் யாரென்று தெரியாது என மெக்கானிக் தகவல் அளித்தார். வாக்காளருக்கே தெரியாமல் அவரது கையெழுத்தைப் போட்டு முன்மொழிவு கடிதம் கொடுத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment