வடகிழக்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தமிழகத்தில் மழை நீர் வெள்ளம் போல காட்சியளித்து சாலைகள் வீடுகளில் தேங்கியது. இதனை சீரமைக்கும் பணியில் முன்களப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக அவ்வப்போது ஆளும் கட்சி, எதிர்கட்சியினர் நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டு நிவாரணப் பொருட்களை வழங்குகின்றனர். இந்த நிலையில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள், உணவு பொருட்களை வழங்கி அவர்களிடம் நலம் விசாரித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை கூறியுள்ளார். அதன்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க போராடிய பணியாளர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை சீரமைத்த முன் களப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் 2000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியதை சுட்டிக்காட்டி கூறினார்.
அதனால் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் முன் களப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைவருக்கும் ரூபாய் 5000 ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.