75% நிறைவேற்றம்! சொல்லியது மட்டுமல்ல சொல்லாததையும் செய்தோம்: முதல்வர் ஸ்டாலின்;

நம் தமிழகத்தில் முதல் முறையாக முதல்வராக உள்ளார் ஸ்டாலின். கடந்த பத்தாண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை சிங்காசனத்தில் வீற்றிருக்கிறது திமுக. திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக நிறைவடைந்துள்ளன.

திமுக ஆட்சியை பற்றி மக்கள் மத்தியில் நல்லதொரு அபிப்பிராயமே காணப்படுகிறது. அவ்வப்போது குறைபாடுகளும் மக்கள் வைக்கின்றனர். இந்த சூழ்நிலையில் திமுக அரசானது கூறியுள்ள அறிவிப்புகளில் 75 சதவீதம் நிறைவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 1641 அறிவிப்புகள் வெளியிடப் பட்டது. இந்த 1641 அறிவிப்புகளில்  1238 அறிவிப்புகளுக்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக அரசின்  எட்டு மாத சாதனைகள் குறித்த வீடியோவை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் சென்று சேரும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சொன்ன வாக்குறுதி  மட்டுமின்றி சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். அரசின் கோப்புகள்தேங்காத வண்ணம்  செயல்பட்டு வருகிறேன் என வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment