ரஷ்யாவுக்கு ரிவெஞ்ச் கொடுத்த ஜப்பான்! இனி எண்ணெய் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்க மாட்டோம்!!

நேற்றையதினம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சில நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்கியதாக அறிவித்திருந்தார். அதில் முதல் நாடாக அமெரிக்கா, கனடா ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை நீக்கி இருந்தார்.

பின்பு ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளையும் ரஷ்யா தனது நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து விலகியது. இந்த நிலையில் ஜப்பான் தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்து உள்ளது. அதன்படி ரஷ்யாவுக்கு இனிமேல் எண்ணெய் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கப்படாது என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

உக்ரேன் மீதான படையெடுப்பை கண்டித்து ரஷ்யா மீது ஜப்பான் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவிலுள்ள ஆம்போல், விவா எனர்ஜி ஆகிய எண்ணெய் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ரஷ்யா மீது பொருளாதார தடைகளை பல நாடுகள் அறிவித்து வந்த நிலையில் ஜப்பான் அரசு இத்தகைய முடிவு எடுத்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்க காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment