செய்திகள்
“நேர்மையான முறையில் உள்ளாட்சித் தேர்தல்”-உயர்நீதிமன்றம் உத்தரவு!!
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளன. இதில் பெரும்பாலான கட்சிகள் தனித்து போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி பாமக, தேமுதிக போன்றவைகள் இந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன. மேலும் திமுக, அதிமுக போன்றவைகள் கூட்டணியோடு தேர்தலை சந்திக்க உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தேர்தல் குறித்து தற்போது சில அதிரடி உத்தரவுகளை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
அதன்படி நடக்க இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக அளித்த மனுவை பரிசீலிக்க வேண்டியது மாநில தேர்தல் ஆணையத்தின் கடமை என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் மனுவை வரும் 29-ஆம் தேதிக்குள் பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தற்போது தேர்தல் ஆணையம் இதற்கு பதில் கூறும் வண்ணமாக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் தேர்தலை நியாயமாக நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் கூறப்படுகிறது. மேலும் வழக்கு விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்.
