நமது சொந்த மக்களை கைவிடக்கூடாது! இந்தியர்கள் தாக்கப்படுவதை பார்க்கும்போது மனம் மிகுந்த வேதனை: ராகுல்

சுமார் ஐந்து நாட்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் புரிந்து கொண்டு வருகிறது. இதனால் உக்ரேனிய மக்கள் பலரும் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர். இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கிறார்கள். என்பது குறிப்பிடதக்கது.

இதனால் இந்திய அரசாங்கம் உக்ரேனிய இந்தியர்களை மீட்பதில் அதி தீவிரம் காட்டிக் கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக தற்போது வரை 5 விமானங்கள் சென்று உக்ரேனில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வந்துள்ளதாக தகவல் கிடைத்தது.

ஐந்தாவது விமானம் இன்று காலை டெல்லியில் 249 இந்தியர்களை ஏற்றிய விமானம் வந்தது. இவ்வாறு உள்ள நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ட்விட்டரில் இது குறித்த கருத்தினை பதிவு செய்துள்ளார்.

அதன்படி உக்ரைனில் தவித்து வரும் நமது சொந்த மக்களை கைவிடக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். உக்ரைனில் தவித்து வரும் இந்தியர்களை மீட்பதற்கான விரிவான திட்டத்தை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறினார். இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதினை பார்க்கும்போது மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகிறது என்றும் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment