கண்மணி அன்போடு பாடலுக்கு எல்லா ரைட்ஸும் வாங்கிட்டு தான் படம் பண்ணினோம்… இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய பிறகு மஞ்சும்மல் பாய்ஸ் பட இயக்குனர் சிதம்பரம் விளக்கம்…

இசைஞானி இளையராஜா அவர்கள் தான் உருவாக்கிய பாடல்களை தனது அனுமதி இல்லாமல் பிறர் பயன்படுத்துவதாக கூறி பலருக்கு நோட்டீஸ் அனுப்பி அதனால் சர்ச்சைக்கு உள்ளாகி சமீப காலமாக பேசுபொருளாக உள்ளார் இளையராஜா.

இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பேசி வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக இளையராஜா அவர்கள், என்னை பற்றி எழும் விமர்சனங்களை நெருங்கியவர்கள் மூலம் தெரிந்துக் கொண்டேன். நான் அந்த விமர்சனங்களை கவனிப்பது இல்லை, மாறாக அந்த நேரத்தில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்து விட்டேன் என்று கூறியிருந்தார்.

சமீபத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுத்து 300 கோடி வசூல் செய்த திரைப்படம் .’மஞ்சும்மல் பாய்ஸ்’. இத்திரைப்படம் மலையாள சினிமாவை உச்சத்திற்கு கொண்டு சென்றது என்றே சொல்லலாம். கேரள இளைஞர்கள் சுற்றுலாவிற்காக கொடைக்கானலுக்கு வருகின்றனர். அங்கு குணா குகையை பார்வையிடும் பெருங்குழியில் மாட்டிக்கொள்ளும் நண்பணை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது கதை.

படத்தில் பெரும்பாலான தமிழ் வசனங்கள் இருப்பதால், படம் தமிழ்நாட்டில் இருக்கும் இடத்தை சுற்றி வருவதால், கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தின் இறுதிக் காட்சியில் கமலஹாசன் நடித்த ‘குணா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு’ பாடலை மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் உபயோக படுத்தியிருந்தார்கள்.

இதற்காக கமலஹாசன் அவர்கள் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ‘குணா’ திரைப்படத்தின் இசையமைப்பாளரான இளையராஜா அவர்கள் தனது அனுமதியின்றி தான் உருவாக்கிய ‘கண்மணி அன்போடு’ பாடலை தனது அனுமதியின்றி ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் உபயோகப்படுத்திவிட்டார்கள் என நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் இளையராஜா.

இதற்கு பதில் அளித்துள்ளார் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குனரான சிதம்பரம் அவர்கள். அவர் கூறியது என்னவென்றால், ‘கண்மணி அன்போடு’ பாடலுக்கான எல்லா ரைட்ஸையும் முன்னதாகேவே வாங்கிவிட்டு தான் படம் பண்ணினோம் என்று தெரிவித்துள்ளார் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...