Connect with us

எங்கள் மாநிலத்தில் கொரோனாத் தடுப்பூசியின் முதல் டோஸ் 100 சதவீதம் போட்டுட்டோம்.. கர்நாடக சுகாதார மந்திரி சுதாகர் மகிழ்ச்சி!

Untitled 91

செய்திகள்

கொரோனாத் தொற்று 2019 ஆம் ஆண்டு துவங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்து பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது.

இரண்டு ஆண்டுகளைக் கடந்தநிலையில் கொரோனா வைரஸுக்கு குணப்படுத்தும் மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி மருந்துகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் உலகம் முழுவதிலும் தடுப்பூசிகள் மும்முரமாக செலுத்தப்பட்டு வருகின்றன.

கொரோனாத் தடுப்பூசியாக கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் என இரண்டு தடுப்பு மருந்துகள் இரண்டு தவணைகளாகச் செலுத்தப்பட்டு வருகின்றது.

கொரோனாத் தடுப்பூசி செலுத்துவது குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை இந்திய அரசு பல வகையான முறைகளில் ஏற்படுத்தி வருகின்றது.

இந்தநிலையில் கொரோனா பாதிப்பில் தென்னிந்தியாவில் அதிக பாதிப்பினை சந்தித்த மாநிலங்களில் ஒன்றான கர்நாடகா கொரோனாத் தடுப்பூசியின் முதல் டோஸினை 100 சதவீதம் செலுத்தி முடித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுகாதார மந்திரி சுதாகர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 100 சதவீதம் செலுத்தப்பட்டு உள்ளது” என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top