Connect with us

10 ஆண்டுகளில் செய்யாததை 10 மாதங்களில் செய்துவிட்டோம் : முதல்வர் பெருமிதம் !!

stalin new16

Tamil Nadu

10 ஆண்டுகளில் செய்யாததை 10 மாதங்களில் செய்துவிட்டோம் : முதல்வர் பெருமிதம் !!

10 ஆண்டுகளில் செய்யாததை 10 மாதங்களில் செய்துவிட்டோம் : முதல்வர் பெருமிதம் !!

தமிழகம் தொழில் துறையில் வேகமாக முன்னேறி வருவதாக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர்  கே.பி முனுசாமி அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித கப்பல் என முதல்வர் கூறியதைப் பற்றி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் 10 ஆண்டுகளில் செய்யாததை 10 மாதத்தில் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த 10 மாதங்களில் 137 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக  தமிழகத்திற்கு  69,379 கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் முதலீட்டாளர்கள் வருவார்கள் என்றார். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருவதாக கூறினார்.

மேலும், தொழில்துறையின் பயன்கள் அனைத்து மாவட்டங்களிலும் சென்று சேரும் வகையில் அரசு பணியாற்றி வருவதாக  சட்டப்பேரவையில்  முதல்வர் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top