எங்களுக்கும் ஃபேமிலி இருக்குது; நாங்க சும்மா ஒன்னும் இல்ல ஜூலி! டென்ஷனான தாடி;

ஜனவரி மாதம் கடைசியில் வெளிவந்து பிக்பாஸ் ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டு தற்போது வரை ஓடிக் கொண்டிருக்கின்ற ஒரு ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் அல்டிமேட். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஐந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில்  போட்டியிட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கு நாள்தோறும் காரசாரமான சண்டைகளும், வாக்குவாதங்களும் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. அதுவும் குறிப்பாக தற்போது ஜூலிக்கும் தாடி பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது.

அதில் ஜூலி  நான் அனிதாவை மட்டும் தான் சொன்னேன் சுருதி பற்றி சொல்லவில்லை என்று கூறுகிறார். இதனைப் விளக்கம் அளிக்கவும் முயற்சிக்கிறார். ஆனால் தாடி பாலாஜியோ அவரிடத்தில் சண்டை போடுவது போல பேசுகிறார்.

இதனால் அவர்களுக்கு இடையே பெரும் முரண்பாடு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் டென்ஷனான தாடி பாலாஜி எங்களுக்கும் ஃபேமிலி இருக்கிறது என்று ஜூலியை காயப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment