News
இதை செய்யாமல் இருந்தால் கொரோனா போரில் தோற்று இருப்போம்: முதல்வர் தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பரவலாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் சுமார் 10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஒரு மாநில அரசு மட்டும் தனியாக கொரோனா போருக்கு எதிராகப் போராடுவது சாத்தியமில்லை என்றும் மத்திய அரசுடன் இணைந்து போரிட வேண்டும் என்றும் அனைத்து மாநில அரசுகளும் முடிவு செய்துள்ளன
குறிப்பாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று டெல்லி. டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கொரோனா விஷயத்தில் இருதரப்பும் கைகோர்த்து கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் செய்தியாளர்களிடம் கூறியபோது டெல்லி அரசு மட்டும் தனியாக கொரோனாவை எதிர்த்து போராடி இருந்தால் தோல்வியைத் தழுவி இருப்போம் என்று அதனால்தான் நாங்கள் மத்திய அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மத அமைப்புகள் உட்பட அனைவரிடமும் இணைந்து செயல்படுகிறோம் என்றும் அவ்வாறு இணைந்து செயல்படாமல் இருந்தால் கொரோனா போரில் தோற்று இருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இதேபோல் மற்ற மாநில முதல்வர்களும் மத்திய அரசுடனும் தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்
