Connect with us

‘தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப்பாடல்’ என்பதை உணர்கிறோம்: ரிசர்வ் வங்கி விளக்கம்;

tamilthai

செய்திகள்

‘தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப்பாடல்’ என்பதை உணர்கிறோம்: ரிசர்வ் வங்கி விளக்கம்;

‘தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப்பாடல்’ என்பதை உணர்கிறோம்: ரிசர்வ் வங்கி விளக்கம்;

நேற்றைய தினம் பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் அரங்கேறியது. அதன்படி நேத்து குடியரசு தின விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் படிக்கும்போது ரிசர்வ் வங்கியின் ஊழியர்கள் எழுந்து நிற்காமல் செய்தியாளர்கள் மத்தியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி கூறினர்.

இதனால் இன்று காலை சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழ் தாய் வாழ்த்து மாநில பாடல் என்பதை உணர்கிறோம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் மதிக்கிறோம் என்றும் கூறியுள்ளது. குடியரசு தின விழாவில் தமிழ் கலாச்சாரம், மொழிக்கு மரியாதை செலுத்துவதன் அடையாளமாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாட்டின் மாநில பாடல் என்பதை உணர்கிறோம் என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. தமிழ் தாய் வாழ்த்து பாடல் குறித்து சற்றும் எதிர்பாராத வருந்தத்தக்க, தேவையற்ற கூற்றுகள் எழுப்பப்பட்டன என்றும் கூறியுள்ளது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து எங்கள் நிலைப்பாட்டை உணர்த்திவிட்டோம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குனர் எஸ் எம் சுவாமி தமிழக நிதியமைச்சரை சந்தித்து நிலைப்பாட்டை உறுதி செய்ததாக விளக்கம் அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top