நேற்று தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் எதிர்பாராதவிதமாக கன மழை கொட்டித் தீர்த்தது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு தகவலும் அதற்கு முன்பே அறிவிக்கப்படவில்லை என்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து புவியரசன் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி தரவுகளின் அடிப்படையிலேயே மழை குறித்த முன்னறிவிப்பை வெளியிடுகிறோம் என்றும் புவியரசன் கூறினார். சென்னையில் நேற்று கனமழை பெய்தது பற்றி முன்கூட்டியே எச்சரிக்காதது குறித்து புவியரசன் விளக்கமளித்துள்ளார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி எதிர்பார்ப்புக்கு மாறாக சில நேரங்களில் வேகமாக நகர்ந்து வரும் என்றும் கூறினார்.
நிலப்பகுதியில் இருந்த மேலடுக்கு சுழற்சி கடல் பரப்பு மேல் இருந்ததாக கணித்து விட்டோம் என்றும் அவர் கூறினார். நிலப்பகுதியில் இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கணிக்கத் தவறி விட்டோம் என்று புவியரசன் கூறினார். சென்னையில் நேற்று 10 கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது என்று கூறியுள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தான் கன மழையை எதிர்பார்த்தோம் என்றும் புவியரசன் கூறினார். இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு இந்த அளவுதான் கணிக்க முடிகிறது புவியரசன் என்றும் கூறினார்.
காரைக்காலில் தேவையான கருவிகள் இல்லாததால் மேலடுக்கு சுழற்சி குறித்து கணிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். சென்னையில் பெய்த மழைக்கு மேகவெடிப்பு காரணம் அல்ல என்றும் புவியரசன் விளக்கமளித்தார். கனமழை குறித்து துல்லியமாக கணிக்க அதிநவீன கருவிகள் தேவை என்றும் புவியரசன் கூறியுள்ளார்.