Connect with us

அதிமுக எங்களுக்குதான் அடித்து சொல்லும் ஆர்.பி.உதயக்குமார்

RB Udhaykumar admk

செய்திகள்

அதிமுக எங்களுக்குதான் அடித்து சொல்லும் ஆர்.பி.உதயக்குமார்

நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியே பொதுக்குழு நடைபெற்றது – மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கிறோம் -ஆர்.பி.உதயக்குமார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் துரைராஜ் இல்ல விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்., பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.,

அப்போது அதிமுகவின் ஒற்றை தலைமை கோரிக்கையை ஏற்று ஒன்னரை கோடி தொண்டர்களின் சார்பாக 99 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர்., பொதுக்குழுவும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே நடைபெற்றது., அது செல்லாது என்ற உயர்நீதிமன்ற தனிநீதிபதி அளித்த தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு குறித்த தீர்ப்பு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கிறோம்.,

மேலும் தற்போதைய முதல்வரான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை புறக்கணித்து வருகிறார்., தற்போது வரை திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை மாறாக புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் பணியிலேயே ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி கேரளாவில் அமித்ஷா தலைமையில் நடைபெறும் மாநாட்டில் தமிழக முதல்வர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.,

அது சமயம் காவேரி மற்றும் முல்லை பெரியாறு அணை பிரச்சனைகள் குறித்து முதல்வர் எடுத்துரைக்க வேண்டும் என அதிமுக கேட்டுக் கொள்கிறது.

தொடர்ந்து எதிர்க்கட்சியாக மக்களின் அனைத்து போராட்டங்களிலும் உறுதுணையாக இருந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக செயல்படும் என தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top