அதிமுகவினரை நாங்கள் பகைவர்களாக நினைக்கவில்லை!!: சட்டப்பேரவையில் அமைச்சர் வேலு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மானியக் கோரிக்கைகள் மீது சட்டப் பேரவையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக இன்றைய தினம் பொதுப்பணித்துறை சார்பில் விவாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள வேலு  அனைத்து விதமான திட்டங்கள் பற்றி அறிவித்தார். அப்போது பேசிய அவர் அதிமுகவினரை நாங்கள் எதிரிகளாக என்ன வில்லை என்று கூறியது அவையில் சந்தோசத்தை உருவாக்கியது.

அதன்படி அதிமுகவினரை நாங்கள் பகைவராக நினைக்கவில்லை என பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பதிலளித்தார். பகைவருக்கும் உதவக்கூடியவர் தான் நம் தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

சில நேரங்களில் நீங்கள் புரிந்து கொள்ளாமல் பிரச்சினைக்கு இருக்கிறீர்கள் என்று அதிமுக வினரை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு  கூறினார். இதனால் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே நட்புறவு உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment