தேர்தலை நாங்கள் அரசியல் யுத்தமாக கருதவில்லை; எப்போதும் மக்களோடு இருப்பவன் தான் ஸ்டாலின்!
கடந்த சனிக்கிழமை தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்காக பலரும் அதிதீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். அதில் ஒருவரை மற்றவர் விமர்சித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தலை யுத்தமாக கருதவில்லை என்று கூறியுள்ளார். அதன்படி திமுகவைப் பொறுத்தவரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அரசியல் யுத்தமாக கருதவில்லை என்று கூறியுள்ளார்.
திமுக ஆட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளமாகவே திமுக களம் கண்டது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். தங்களின் தோல்வியை மறைக்க அவதூறுகளை அள்ளிவிட்டனர் எதிர்க்கட்சியினர் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
அதிமுகவின் தோல்வி உறுதி என்பதால் அவர்களின் கபடநாடகம் கலைந்து உண்மை முகம் தெரிந்து விட்டது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார் .தேர்தல் முறை மறைமுகமாக இருந்தாலும் நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
கடைகோடி மனிதரும் ஜனநாயக நிழலில் இளைப்பாற வேண்டும் என்பதே எனது ஆழ்ந்த எண்ணம் என்றும் முதலமைச்சர் கூறினார். வெற்றிக் கொண்டாட்டங்கள் குறைத்து மக்கள் பணிகளை கூடுதலாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றும் கூறினார்.
எந்தவகையிலும் வாக்காளர்களுக்கு இடர்பாடு நேராத வண்ணம் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். உங்களில் ஒருவனாக நான் எப்போதும் மக்களுடன் இருப்பவன்; மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் என்றும் முதலமைச்சர் கூறினார்.
எல்லா கட்டங்களிலும் மக்களோடு இணைந்தும் பிணைந்தும் இருப்பேன் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 10 ஆண்டுகாலமாக உள்ளாட்சி நிர்வாகம் முற்றிலும் முடங்கி கிடப்பதால் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறினார்.
அதிமுக ஆட்சியின் அவலங்களை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே அறிந்து இருக்கிறார்கள் என்றும் முதலமைச்சர் கூறினார். திமுக ஆட்சி அமைந்தால் தான் உள்ளாட்சி ஜனநாயகம் மலரும் என்ற நல்ல நம்பிக்கையுடன் மக்கள் வாக்களித்தனர் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
