எங்களுக்கு திருமணம் ஆகவில்லை… ஆனாலும் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை… நடிகர் பப்லு ப்ரித்விராஜின் முன்னாள் காதலி ஷீத்தல் போட்ட இன்ஸ்டா பதிவு…

நடிகர் பப்லு பிரித்விராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்தவர். 1990 மற்றும் 2000 களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர். 1979 ஆம் ஆண்டு ‘நான் வாழவைப்பேன்’ என்ற படத்தில் ‘பப்லு’ என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். பின்னர் அந்த ‘பப்லு’ என்ற பெயரை அடைமொழியாக ஆக்கிக் கொண்டார்.

1998 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடித்த ‘அவள் வருவாளா’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து தனது நடிப்புத் திறமையால் அனைவரின் பாராட்டைப் பெற்றார். அதன் பின்பு சின்னத்திரையில் அதிகமாக தோன்றி மக்களிடையே பிரபலமானார். ‘மர்ம தேசம்’, ‘அரசி’, ‘வாணி ராணி’, ‘ராஜ ராஜேஸ்வரி’ ஆகிய தொடர்களில் நடித்தது இவரது வாழ்வில் திருப்புமுனையாக இருந்தது.

அடுத்ததாக ஜெயா தொலைக்காட்சியில் ‘சவால்’ என்ற விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சாமானிய மக்கள் கூடும் இடத்தில் பொதுமக்களுக்கு சிறு சிறு போட்டிகள் வைத்து ஜெயிப்பவர்களுக்கு பரிசு வழங்குவது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் ஆகும். அந்த நேரத்தில் ‘சவால்’ நிகழ்ச்சி மிக பிரபலமாக இருந்தது. இதன் மூலம் தனக்கென ரசிகர்களைப் பெற்றார் பப்லு பிரித்விராஜ். இறுதியாக ரன்பிர் கபூரின் ‘அனிமல்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், 1994 ஆம் ஆண்டு பீனா என்பவரை மணந்துக் கொண்டார். அனால் சில வருடங்களிலேயே பிரிந்து விட்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தற்போது அவரது மகனுக்கு 28 வயது ஆகிறது. அவர் ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு 56 வயதான நடிகர் பப்லு பிரித்விராஜ் 23 வயதான ஷீத்தல் என்பவரை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்து தனது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

அந்த ஆண்டு இவர்கள் இருவரும் சமூக வலைத்தளங்களில் அளித்த பேட்டிகள் மிகவும் வைரல் ஆனது மற்றும் பேசு பொருளாகவும் ஆனது. தனது மகனின் வயதை விட குறைந்த வயதை கொண்டப் பெண்ணை திருமணம் செய்ய போகிறாரா என்று சிலர் ஆதரித்தாலும் பலர் விமர்சனங்களும் செய்து வந்தனர். ஆனால் எதைப் பற்றியும் கண்டு கொள்ளாத பப்லு பிரித்விராஜ் மற்றும் ஷீத்தல் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ ஆரம்பித்தனர்.

தனக்கென யூ டியூப் சேனலை நடத்தி வரும் பப்லு பிரித்விராஜ் அதில் இருவரும் இணைந்து வீடியோ பதிவேற்றம் செய்து வந்தனர். சில மாதங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து வீடியோ போடுவதை நிறுத்திக்கொண்டனர். அதைப்பற்றி ரசிகர்கள் கேட்கையில் நாங்கள் பிரிந்து விட்டோம் என்று பதிலளித்து இருந்தனர்.

இந்நிலையில், ஷீத்தல் சமீபத்தில் அவர் தனியாக பயணம் செய்த விடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அதில் பலர் நீங்கள் ஏன் தனியாக இருக்கிறீர்கள், பப்லு ப்ரித்விராஜுடன் உங்கள் திருமணம் என்ன ஆனது போன்ற கேள்விகளை கமெண்ட் செய்திருந்தனர். அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு போஸ்டை பதிவு செய்திருந்தார். அதில், என்னை எல்லாரும் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று நினைக்கிறன். எனக்கும் பப்லு ப்ரித்விராஜிற்கும் திருமணம் ஆகவில்லை. நாங்கள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது போல் எங்கள் வாழ்க்கை இல்லை. அதனால் நாங்கள் பிரிந்து விட்டோம். இப்போது எங்கள் வாழ்க்கையை தனித்தனியே பார்த்துக் கொள்கிறோம். எங்கள் முடிவிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனக்கு அன்பையும் ஆதரவையும் அளித்தவர்களுக்கு நன்றி என்று தனது இன்ஸ்டா போஸ்டில் பதிவிட்டிருந்தார் நடிகர் பப்லு ப்ரித்விராஜின் முன்னாள் காதலி ஷீத்தல்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...