Connect with us

நமக்கு விபத்து ஏற்பட்டால் ஆஸ்பத்திரிக்கு போகலாம்; ஆஸ்பத்திரிக்கே விபத்து ஏற்பட்டா?

accident 1

செய்திகள்

நமக்கு விபத்து ஏற்பட்டால் ஆஸ்பத்திரிக்கு போகலாம்; ஆஸ்பத்திரிக்கே விபத்து ஏற்பட்டா?

நமக்கு விபத்து ஏற்பட்டால் ஆஸ்பத்திரிக்கு போகலாம்; ஆஸ்பத்திரிக்கே விபத்து ஏற்பட்டா?

பொதுவாக விபத்து என்பது பலரின் கவனம் குறைவாகத்தான் காணப்படுகிறது. இந்த விபத்தின் காரணமாக பல்வேறு விதமான சேதங்கள், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும்.

ஆனால் தற்போது மருத்துவமனைக்கே விபத்து ஏற்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதன்படி தாய்லாந்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அங்கிருந்த மருத்துவமனைக்குள் புகுந்தது.

தாய்லாந்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மருத்துவமனை அலுவலகத்தின் கண்ணாடி கதவுகளை உடைத்து கொண்டு மருத்துவமனைக்கு உள்ளே புகுந்தது.

இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். 73 வயதான ஸ்ரீலா என்பவர் காரை பின்னோக்கி எடுப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்து உள்ளதால் கார் முன்னே நகர்ந்து விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. இதில் யாரும் உயிரிழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top