உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் பெரும் பிரச்சினையாக காணப்படுவது எல்லை பிரச்சனை தான். அதுவும் குறிப்பாக நம் இந்தியாவுக்கு சீனா, பாகிஸ்தான் போன்றவை அதிக அளவு எல்லை பிரச்சனையை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.
இதனால் எல்லைகளில் அசம்பாவிதங்களும் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. ஒரு சில நேரங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆங்காங்கே இந்தியாவின் எல்லைக்குள் நுழைய முற்படுவார்கள். பாகிஸ்தானிலும் இந்திய வீரர்களை அவ்வப்போது சிறைக் கைதிகளாக பிடித்துச் செல்வார்கள்.
இதுகுறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தப்படி பாகிஸ்தான் சிறைகளில் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் 83 பேர் உள்ளதாக நம்புகிறோம் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. சிறையில் வாடும் இந்தியர்கள் குறித்த தகவல்களை பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொள்ள மறுக்கிறது என்றும் ஒன்றிய அரசு கூறியது.
சட்டவிரோதமாக பாகிஸ்தான் சிறைகளில் இந்திய வீரர்கள் அடைக்கப்பட்டுள்ளனரா? மீட்க நடவடிக்கை என்ன? என்று உறுப்பினர் கேள்வி எழுப்பினார். மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் பதிலளித்தார்.
சிறையில் உள்ள இந்திய வீரர்களை திருப்பி அனுப்புவது, விடுவிப்பது தொடர்பாக பாகிஸ்தான் அரசு ஜனவரி 1-ஆம் தேதியில் பேச்சுவார்த்தை நடத்தினோம் என்றும் கூறினார். 2014 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் படையினரால் கைதான 2193 மீனவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர் என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.