பயணிகளின் பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி- ஸ்பைஸ் ஜெட்!!

உலகில் தற்போது விமான சேவையானது அதிகரித்துள்ளது. அதுவும் தனியார் விமான நிறுவனங்களின் சேவைகளும் நாளுக்கு நாள் வந்து கொண்டே உள்ளன. அவற்றுள் பிரதான ஒன்றாக திகழ்கிறது ஸ்பைஸ் ஜெட்.

இந்த நிலையில் இந்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தற்போது சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறோம் என்று ஸ்பைஸ் ஜெட் கூறியுள்ளது.

அனைத்து விமானங்களும் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தணிக்கை செய்யப்பட்டு பின்பு பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கூறியுள்ளது.

ஸ்பைஸ்  ஜெட் நிறுவனத்தின் விமானங்கள், விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையரகத்தால் தொடர்ந்து தணிக்கை செய்யப்பட்டு கொண்டு வருகிறது என்றும் கூறியுள்ளது.

சமீப காலமாக விமானங்களில் கோளாறு ஏற்பட்டு அவசரமாக தரையறுக்கப்பட்ட நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இத்தகைய விளக்கத்தினை அளித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment