Connect with us

மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்! வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!!

ராகுல் காந்தி

News

மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்! வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!!

மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்! வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!!

இன்றைய தினம் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டது. இதில் 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்த தேர்தல் மட்டுமின்றி காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பஞ்சாப் மாநிலம் தற்போது ஆம் ஆத்மியின் கரத்திற்கு சென்றதாக காணப்படுகிறது.

இதனால் காங்கிரஸ் கட்சி அடுத்த ஏமாற்றத்தில் உள்ளனர். இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சிதம்பரம் தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்வதாக கூறியிருந்தார். நாளைய தினம் முதல் அடுத்த தேர்தலுக்கு தயாராவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். அதன்படி 5 மாநில தேர்தலில் மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்பதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல்காந்தி ட்விட் செய்துள்ளார். தோல்வியில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக் கொள்ளும் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு ராகுல்காந்தி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top