தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம்! நாளையிலிருந்து அடுத்த தேர்தலுக்கு தயாராவோம்: முன்னாள் மத்திய அமைச்சர்
இன்று காலை முதல் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எண்ணபட்டு வந்தது. இதில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் தவிர மீதமுள்ள 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
இதனால் தேசமெங்கும் உள்ள பாஜகவினர் கொண்டாடிக் கொண்டு வருகின்றனர். அதே வேளையில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ்க்கு இந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக காணப்படுகிறது.
அதுவும் குறிப்பாக காங்கிரஸ் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கோவா மாநிலத்தில் இத்தகைய பின்னடைவு காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
அதன்படி கோவா சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். அடுத்த தேர்தலுக்காக நாளையிலிருந்து தயாராகும் என முன்னாள் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
பாஜக எதிர்பார்ப்பு வாக்குகள் கோவாவில் பிரிந்துள்ளன என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் கூறினார். பல தொகுதிகளில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் தோல்வி ஏற்பட்டுள்ளது என்றும் பா சிதம்பரம் கூறியுள்ளார்.
