
Tamil Nadu
நாளை மாலை 5 மணி அளவில் கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்..!
இரண்டு நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது வரலாற்றிலேயே முதல் முறையாக நடந்த நிகழ்வாகும். ஏனென்றால் மேட்டூர் அணையில் இந்தியா விடுதலை பெற்ற பின்பு மே மாதத்தில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
ஆனால் மழையின் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த அணை சேலம் மாவட்டத்தில் இருந்தாலும் சுற்றியுள்ள 14 மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
திறந்துவிடப்பட்ட தண்ணீரின் விளைவால் நாளைய தினம் கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக நாளை தஞ்சை கல்லணையில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
நாளை மாலை 5 மணி அளவில் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கோடையிலேயே தண்ணீர் திறந்து விட உள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
