Connect with us

சென்னையில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்-குடிநீர் வாரியம் அறிவிப்பு!!

water lorry

தமிழகம்

சென்னையில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்-குடிநீர் வாரியம் அறிவிப்பு!!

தற்போது சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் மழை பெய்து தொடங்கி விட்டால் சென்னையை சுற்றி தண்ணீர் கட்டுப்பாடு ஏற்படும்.

மேலும் பல இடங்களில் குடிநீர் குழாய்களும் பழுதடைய தொடங்கிவிடும். அந்த வகையில் நாளைய தினம் திடீரென்று மூன்று பெரு நகரங்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக நாளை 3 பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை மாலை 5 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்றும் சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று கூறியுள்ளது.

ஈச்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top