பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு!!!

கடந்த சில நாட்களாக நாம் தமிழகத்தில் இருந்து தொடர்ந்து அணைகளில் இருந்து நீர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டில் மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து நீர் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இது சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக திறந்து விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் தொடர்ந்து தமிழக மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கன மழை பெய்து கொண்டு வருகிறது மேலும் தமிழகத்திற்கு இந்த முறை காவிரி நீரானது அதிக அளவு திறந்துவிடப்பட்டுள்ளதாக காணப்படுகிறது.

இவ்வாறு உள்ள நிலையில் தற்போது மற்றும் ஒரு அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

சுமார் 120 நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூரில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment