மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..!! மேட்டூர் அணையின் 16 கண் மதகுகளின் நீர் திறப்பு நிறுத்தம்!!!

நம் தமிழகத்தில் கடந்து சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்தியாவின் குறிப்பிட்ட மாநிலங்களிலும் கனமழையின் தீவிரம் காணப்பட்டது.

இதனால் கர்நாடக அரசு தமிழகத்திற்கு இந்த முறை காவிரி நீர் சற்று அதிகமாகவே திறந்து விட்டது. எனவே காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக எந்த ஒரு ஆண்டிலும் இல்லாத வகையில் தற்போதைய ஆண்டில் மே மாதம் முதலிலேயே பாசனதிற்க்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கடந்த சில நாட்களாக 16 கண் மதகுகளில் இருந்தும் திறந்து விடப்பட்டது, இந்த நிலையில் மேட்டூர் அணையின் 16 கண் மதகுகளின் தண்ணீர் திறப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது .

அதன்படி சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக 19 நாட்களாக திறக்கப்பட்டு வந்த உபரி நீர் திறப்பு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இருபதாயிரம் கன அடியாக சரிந்ததால் 16 கண் மதகுகளில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு ஜூலை 16ஆம் தேதியிலிருந்து இன்று வரை சுமார் 270 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் அணையிலிருந்து சுமார் 260 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment