கனமழை எதிரொலி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு!!

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளின் அணைகளாக இருக்கும் கே.ஆர்.எஸ், கபினி, ஆரங்கி உள்ளிட்ட 4 அணைகள் தற்போது நிரம்பும் தருவாயில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் முழு கொள்ளளவை எட்டும் சூழலில் இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் நீர் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என இன்று எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இந்த சூழலில் தற்போது கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 22,286 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

அந்த வகையில் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 13,286 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 11 ஆயிரம் கன அடி நீரும் தமிழக கால்வாயில் இருந்து திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒட்டுமொத்தமாக தற்போது 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment