Connect with us

திடீரென்று அதிகரித்த நீர்வரத்து! மேட்டூர் அணையின் நீர் திறப்பு உயர்வு!!

மேட்டூர் அணை

தமிழகம்

திடீரென்று அதிகரித்த நீர்வரத்து! மேட்டூர் அணையின் நீர் திறப்பு உயர்வு!!

நேற்றைய தினம் மேட்டூர் அணையில் தண்டோரா ஒலி எழுப்பப்பட்டது. ஏனென்றால் மேட்டூர் அணையின் 16-வது கண் திறக்கப்பட்டதால் அங்கு நீர் திறப்பானது அதிக அளவு வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் இதுவரை 9 அணைகள் தனது முழு கொள்ளவே எட்டி உள்ளதாகவும் நீர் பாசனத்துறை நேற்றைய தினம் தகவல் அளித்துள்ளன.

அவற்றுள் மேட்டூர் அணையும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பானது 41000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கன அடியில் இருந்து 42,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நீர் திறக்கும் 41,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடி; மேலும் அங்கு இதுவரை நீர் இருப்பு 93.47 டிஎம்சி யாக உள்ளது. கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top