மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிவு; 65 ஆயிரம் கன அடியாக குறைப்பு!

மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 65 ஆயிரம் கன அடியாக தற்போது சரிந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால்,  காவேரியில் நீர் வரத்து குறைந்து, மேட்டூர் அணைக்கான நீர் வரத்தும் சரிந்துள்ளது.

நேற்று மாலை நிலவரம் படி வினாடிக்கு  88 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து இன்று காலை நிலவரம் படி வினாடிக்கு  78 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேலும் மழையின் அளவை பொறுத்து நீர்வரத்து குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது. 9-வது நாளாக பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தொடர்ந்து தடை நீடிக்கிறது

தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 65 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே நிரம்பியுள்ளதால் அணையில் இருந்து 65 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.  நீர் மின் நிலையங்கள் வழியாக 21 ஆயிரத்து 500 கன அடி நீரும்

உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 43 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் என மொத்தம் 65 ஆயிரம் கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக முழு கொள்ளளவான 120 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment