Connect with us

50000 கன அடியை எட்டிய நீர்வரத்து!! டெல்டா மாவட்டங்களில் அபாய எச்சரிக்கை?

காவிரி

தமிழகம்

50000 கன அடியை எட்டிய நீர்வரத்து!! டெல்டா மாவட்டங்களில் அபாய எச்சரிக்கை?

நம் தமிழகத்திலேயே கனமழை எச்சரிக்கை விடுவிக்கப்பட்ட நிலையில் காவிரி நீரானது சற்று அதிகளவு திறந்து விடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்றைய தினம் இரு மடங்கு அதிகரித்து கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட்டது.

அதன்படி நேற்றைய தினம் 45 ஆயிரம் கன அடியாக காவிரி நீர் திறப்பு காணப்பட்டது. அதற்கு முன்பு நாள் வரை 23 ஆயிரம் கன அடியாகத்தான் காவிரி நீர் திறப்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய தினம் அதனை விட அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி தமிழக எல்லையான பிழி குண்டுளுவில் காவிரி நீர்வரத்து ஆனது 45,000 கன அடியில் இருந்து 50,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனால் டெல்டா மாவட்டங்களில் பாசன வசதிக்காக பயன்படுத்தப்படும் உபரி நீர் சிறப்பானது அதிகமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் இன்னும் சில நாட்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்பதும் தவிர்க்க முடியாததாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top