30 இடங்களில் தண்ணீர் வெளியேற்றம்! 1.5 லட்சம் காலை உணவு பொட்டலங்கள்!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடர் கனமழை பெய்தது. இதன் விளைவாகத் சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மழை நீரானது வீட்டிற்குள் புகுந்து முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளதாக காணப்படுகிறது.

சென்னையில் மழை

இந்த நிலையில் சென்னையில் 30 இடங்களில் முழுமையாக தண்ணீர் வெளியேற்றப்பட்ட தாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி காலை 10 மணி நிலவரப்படி மழை நீர் தேங்கியிருந்த 187 இடங்களில் தற்போது 30 இடங்களில் இருந்து தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு உள்ளது.

மீதமுள்ள 157 இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.சென்னையில் பெய்த தொடர் மழையால் சாலைகளில் விழுந்த 38 மரங்களும் அகற்றப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

சென்னையில்  மழை நீர் தேங்கிய 16 சுரங்கப் பாதைகளில் 14 சுரங்கப் பாதைகளில் இருந்து தற்போது முழுமையாக தண்ணீர் வெளியேற்றப்பட்டன. இதனால் சென்னையில் மீதமுள்ள பகுதிகளில் இருந்து தீவிரமாக மழை நீர் வெளியேற்றப்படுகிறது.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி விட 200 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுரங்கபாதை, சாலைகளில் தேங்கிய வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் பணிகள் நடக்கின்றன. சென்னையில் 1.5 லட்சம் மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment