தமிழகம்

சென்னையின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரியின் நீர் இருப்பு விவரம்!!!

நம் தமிழகத்தின் தலைநகரமாக காணப்படுகிறது சென்னை. என்ன தான் தலைநகரமாக சென்னை இருந்தாலும் அதற்கு குடிநீர் ஆதாரமாக பல ஏரிகள் தான் காணப்படுகிறது. அவற்றுள் பிரதான ஏரியாக செம்பரம்பாக்கம், புழல் ஆகியவை அமைந்துள்ளன.

அந்த படி இந்த ஏரிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே காணப்படுகிறது. மேலும் அங்கு நீர் இருப்பு பற்றிய நிலவரம் கிடைத்தது. அதன்படி புழல் ஏரியில் தண்ணீர் இருப்பு 3002 மில்லியன் கன அடியாக காணப்படுகிறது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி ஆகும். புழல் ஏரிக்கு வினாடிக்கு 256 கண்ணாடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. சென்னை குடிநீருக்காக புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 160 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதை போல் சோழவரம் ஏரியில் நீர் இழப்பு 132 மில்லியன் கன அடியாக காணப்படுகிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி என்பதும் குறிப்பிடத்தக்கது. பூண்டி ஏரியிலிருந்து சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.