தீபக் சாஹர் காயம்: டி20-யில் களமிறங்கும் வாஷிங்டன் சுந்தர்..!!!

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது வருகின்ற 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் போட்டியாளர்களின் எதிர்பார்ப்பானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

அந்தவகையில் அடுத்தடுத்த அப்டேட்களும் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து வருகிறது. அதே சமயம் முக்கிய வீரர்களை நீக்குவது குறித்து பிசிசிஐ தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் தீபக்சாகர் முதல் ஒருநாள் போட்டியில் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் குணமடைய சில நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.

இதனால் டி20 போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ கூறியது. இத்தகைய செய்தியானது
அவருடைய ரசிகர்கள் மத்தியில் இடியாக விழுந்தது.

இருப்பினும் இவருக்கு பதில் யார் விளையாடுவது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் தற்போது தீபக் சாஹருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.