Tamil Nadu
காரை ஓட்டிய யாஷிகா மதுபோதையில் இருந்தாரா? போலீஸார் விசாரணை!
நேற்று அதிகாலை மகாபலிபுரம் அருகே நடைபெற்ற விபத்து ஒன்றில் சிக்கி யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்தார் என்பதும் அவரது தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் காரை ஓட்டியது யாஷிகா ஆனந்த் தான் என்றும் அவர் அதிவேகமாக காரை ஓட்டி வந்ததால் விபத்து நேர்ந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகா ஆனந்த் இடம் காவல்துறையினர் விசாரணை செய்தபோது, யாஷிகா தான் காரை ஓட்டி வந்தார் என்றும் அவர் அதிவேகமாக காரை ஓட்டி வரும்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும் தெரிகிறது.
இதில் சீட் பெல்ட் அணியாமல் உட்கார்ந்திருந்த பவானி காரிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும், சீட் பெல்ட் அணிந்து இருந்த யாஷிகா ஆனந்த் இடுப்பு எலும்பு மற்றும் வலது கால் எலும்பு முறிந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த யாஷிகாவின் இரண்டு ஆண் நண்பர்கள் சையத் மற்றும் அமீர் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தனர் என்று கூறப்படுகிறது. மேலும் காரை ஓட்டிய யாஷிகா மதுபோதையில் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
