Connect with us

காதல் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த டாப் ஹீரோவா?..

kdhal thumb

Entertainment

காதல் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த டாப் ஹீரோவா?..

காதல் படம் 2004ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் தான், இந்த திரைப்படத்தில் பரத், சந்தியா, சுகுமார் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள். படத்திற்கு ஜோஸ்வா ஸ்ரீதர் தான் இசையமைத்திருந்தார்.

large 31fm5kd861tzkfo7os0lutgscse 24141 1

இந்த திரைப்படத்தின் பாடல் இன்னும் பல ரசிகர்களின் பேவரட் பாடலாக தான் வளம் வருகிறது. இந்த திரைப்படம் அந்த காலகட்டத்தில் மிக குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் அதிக வசூலை ஈட்டியது, அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் தென்னிந்திய திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதான பிலிம்பேர் விருதை 2004ஆம் ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான விருதாக தட்டி சென்றது.

“கோ” படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?… நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரே…

santhanu cinemapettai 1200x900 1

முதன்முதலில் இந்த திரைப்படத்தில் பாக்யராஜ் மகன் சாந்தனு பாக்கியராஜ் தான் நடிக்க இருந்ததாக அப்போது கூறப்பட்டது. இந்த தகவலை பாக்யராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது அதன் பிறகு தான் இந்த கதை பரத்திடம் சென்றுள்ளது.

dhanush

ஆனால் உண்மையில் இந்த திரை படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது இவர்கள் இருவரும் இல்லை. இந்த படம் முதன் முதலில் நடிகர் தனுஷ்க்கு தான் கிடைத்தது. அவர் அப்போது மற்ற படங்களில் நடித்து கொண்டிருந்தார். அதனால் அவரால் நடிக்க முடியவில்லை என பரத் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். பரத் இந்த திரைப்படத்தில் நடித்து தனது திரை வாழ்க்கையை மாற்றி அமைத்து வெற்றி தடம் பதித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top