பிரபல தமிழ் காமெடி நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி திடீரென காலமானார் என்பதும், அவர் காலமானதற்கு இரண்டு நாட்கள் முன்னர்தான் தடுப்பு ஊசி செலுத்தி இருந்தார் என்பதால் தடுப்பூசி காரணமாகத்தான் விவேக் காலமானார் என்ற வதந்தி கிளம்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த வதந்திக்கு தமிழக அரசின் சுகாதாரத்துறை முற்றுப்புள்ளி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தடுப்பூசி காரணமாகத்தான் விவேக் மரணமடைந்தார் என்றும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்
அவரது மனுவை பரிசீலினை செய்யப்பட்டதை அடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் இது குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டு உள்ளது. இந்த விசாரணையின் முடிவில் விவேக்கின் மரணம் தடுப்பு ஊசி காரணமாக ஏற்பட்டதா என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது