நள்ளிரவில் ரயில் முன் பாய்ந்து ஆயுதப்படை காவலர் தற்கொலையா? – தீவிர விசாரணை!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திலும் அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் வந்து நேரில் விசாரணை நடத்தினார்.

சிவகங்கை தொண்டி சாலையில் மேம்பாலம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் சரவணன் நள்ளிரவில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி செல்லும் சேது எக்ஸ்பிரஸ் -ல் நள்ளிரவு 1:45 மணிக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாதாக கூறப்படுகிறது.

அதி காலை தகவல் அறிந்து சிவகங்கை நகர் போலீசார் தண்டவாளத்தில் கிடந்த அவரது உடலை கைப்பற்றி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

சரவணன் கடந்த மாதம் காவலராக இருந்து தலைமை காவலர் பணி உயர்வு பெற்றுள்ளார் இவருக்கு ஏழு வயதில் ஆண் குழந்தையும், மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது இவர் 17 ஆண்டுகளாக காவலர் பணியில் இருந்து வருகின்றார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.