தன்னை வழக்கில் சிக்க வைத்தது மஞ்சு வாரியர் தான்!!: நடிகர் திலீப்

பிரபல மலையாள நடிகை ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள நடிகர் திலீப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தன்னை சிக்க வைத்ததாக நடிகர் திலீப் பிரபல நடிகை ஒருவரை குற்றம் சாட்டியுள்ளார்.

அதன்படி பிரபல நடிகை ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை செய்ததின் எட்டாவது குற்றவாளியாக திலீப் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தன்னை சிக்க வைத்தது  முன்னாள் மனைவி நடிகை மஞ்சு வாரியர் தான் இன்று நடிகர் திலீப்  கூறியுள்ளார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் அப்போது மனுவில் திலீப் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. மேலும் நடிகை மஞ்சுவாரியர்க்கும் கேரளா டிஜிபி உயரதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதன் மூலமாக சிக்கவைத்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் மலையாளத்தில் தொழில் போட்டி காரணமாக தன் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மலையாளத்தில் சக்தி வாய்ந்த ஒரு பிரிவினரால் தனிப்பட்ட பழிவாங்கல் காரணமாக தன் மீது இத்தகைய வழக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.