ரூ.1500 கடன்! திரும்ப தராததால் 2 கி.மீ தூரம் பைக்கில் இழுத்து சென்ற அவலம்..!!!

ஒடிசாவில் 1500 கடனுக்காக இளைஞரை இருசக்கர வாகனத்தில் தரதரவென இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே வடமாநிலங்களை பொறுத்தவரையில் வன்கொடுமை தொடர்பான சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒடிசாவில் இளைஞர் ஒருவர் ரூ.1500 கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடனை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், இருசக்கர வாகனத்தில் தரதரவென இழுத்து சென்றுள்ளார். கிட்டத்தட்ட 2 கி.மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இத்தகைய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இதனிடையே அம்மாநில போலீசார் குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சம்பவம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment