Connect with us

அளவுக்கு அதிகமாக மது… ஜெர்மனி விமானத்தில் இறக்கி விடப்பட்டாரா பகவந்த்?

bhagwant mann

செய்திகள்

அளவுக்கு அதிகமாக மது… ஜெர்மனி விமானத்தில் இறக்கி விடப்பட்டாரா பகவந்த்?

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் அதிகளவு மது அருந்தியதால் ஜெர்மனி விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனிக்கு மனைவியுடன் 8- நாள் பயணமாக சென்று இருந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று அவர் டெல்லி திரும்ப இருந்த சூழலில் தலைநகர் வந்த விமானத்தில் பகவந்த் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அடுத்த விமானத்தில் நாடு திரும்பி விட்டதாக தகவல் வந்தது. ஆனால் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் விமானத்திலிருந்து அவன் இறக்கி விடப்பட்டதாக, சக பயணி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே முதலமைச்சரின் செயலானது பஞ்சாப் மாநிலத்திற்கு அவமதிப்பு ஏற்படுத்தியதாக அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய செயலுக்கு பகவந்த் சிங் மான் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top