எச்சரிக்கை: இன்று 6 மாவட்டங்களில் மிக பலத்த மழை! பல மாவட்டங்களில் கனமழை!!

தமிழகத்தில் நாள்தோறும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று 6 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யக் கூடும் என்று கூறியுள்ளது.வானிலை மையம்

இந்த ஆறு மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை பெய்யக் கூடும் என்று கூறியுள்ளது.

கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தேனி, கரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி,விருதுநகர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், நீலகிரி, சேலம் ,ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை, திருச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment