உலக நாடுகளுக்கு எச்சரிக்கை: போர் விவகாரத்தில் யார் தலையிட்டாலும் பதிலடி நிச்சயம்!!
கடந்த மாதம் முதலே உக்ரைன்-ரஷ்யா விவகாரம் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. இதனால் எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என்று உலக நாடுகள் கூறிக் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்த உத்தரவிட்டிருந்தார். தற்போது உக்ரைன் நாட்டின் தலைநகர் மற்றும் முக்கிய நகரங்களில் ரஷ்ய ராணுவம் அதிதீவிரமாக போர் புரிந்து கொண்டு வருகிறது.
உக்ரைனில் குண்டு மழை பெய்து கொண்டு வருகின்றன. இதனால் ரஷ்யாவுக்கு உலக நாடுகள் பலவும் அடுத்தடுத்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. அதுவும் குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ரஷ்யாவிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் தற்போது உலக நாடுகளுக்கு பெரும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கையை யார் எதிர்த்தாலும் பதிலடி நிச்சயம் என்று ரஷ்ய அதிபர் கூறியுள்ளார். உக்ரைன் நாட்டுக்கு ஆதரவு தரும் நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புடின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய உள்விவகார நடவடிக்கையில் தலையிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
