Connect with us

மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் தொடரும் சோகம்! மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை!!

மீனவர்கள்

தமிழகம்

மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் தொடரும் சோகம்! மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை!!

தற்போது இந்தியாவில் தென் கிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கேரள பகுதிகளில் மழை பெய்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் மழை காலம் தொடங்கினாலே மீனவர்களுக்கு கடலுக்கு செல்வதில் சிரமம் ஏற்படும். அதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு பல்வேறு விதமான எச்சரிக்கைகள் தொடர்ந்து விடுவிக்கப்படும்.

அந்த வகையில் சென்னை வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுவித்துள்ளது. அதன்படி ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும் என்று கூறியுள்ளது.

இந்த பலத்த காற்று வீசும் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் ஜூன் மாத இறுதியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியிருந்த நிலையில் மீனவர்களுக்கு இத்தகைய அறிவித்துள்ளது பெருத்த ஏமாற்றமாக காணப்படுகிறது.

அதிலும் மீன்பிடி தடைக்காலம் முடித்து தற்போது தான் மீனவர்கள் கடலுக்கு சென்று நிலையில் இத்தகைய அறிவிப்பு அவர்களுடைய பாதிப்பினை உண்டாக்கி உள்ளதாகவும் காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top