
தமிழகம்
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு-ஐந்து மாவட்ட மக்களுக்கு செல்பி எடுக்க, குளிக்க தடை
பொதுவாக அனைத்து நதிகளும் கடலில் கலக்கும் தன்மையைக் கொண்டது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஒரு நதி மட்டும் கடலில் சேராது. இத்தகைய பெருமையை வைகை நதி பெற்றுள்ளது.
இந்த வைகை நதியானது தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக காணப்படுகிறது. இந்த நிலையில் இந்த வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சில முக்கிய எச்சரிக்கைகள் விடுவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களுக்கு இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வைகை ஆற்றல் இறங்கி செல்பி எடுக்கவோ அல்லது குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து வைகை கரையோரம் உள்ள சாலை போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
