Connect with us

மீனவர்களுக்கு எச்சரிக்கை ஐந்து நாட்களுக்கு “அங்கு” செல்ல வேண்டாம்!

News

மீனவர்களுக்கு எச்சரிக்கை ஐந்து நாட்களுக்கு “அங்கு” செல்ல வேண்டாம்!

a74d1688fa49373d8a4cd023a948079d

மழைக்கால தொடங்கினால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் மிகுந்த மகிழ்ச்சியை காணப்படும். மேலும் அங்குள்ள மக்களும் அந்த மழையினை மிகவும் கொண்டாடுவர் அதுமட்டுமில்லாமல் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். ஆனால் மழைகாலம் தொடங்கினால் ஒரு சிலரின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படையும் அவர்களில் அனைவராலும் தெரிந்தவர் என்றால் அதனை மீனவர்கள் என்றே கூறலாம்.  இந்த  மழைகாலம்  தொடங்கினால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை காணப்படும்.680aa496196240218e71716eae5a26a8

மேலும் மழை தொடங்கினால் அவ்வப்போது கடல் சீற்றத்துடன்  காணப்படுவதோடு மட்டுமின்றி காற்றும் வளர்த்து வீசும். அதனால் அவர்கள் மீன்பிடி தொழிலும் வெகுவாகப் பாதிக்கும். இந்த நிலையில் தற்போது மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் அவர்கள் ஐந்து நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறப்படுகிறது. அதன்படி அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் ஐந்து நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் அடுத்து இரு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top